விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் ரிலீஸ்க்கு முன்பே 200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் 4ஆம் கட்ட படபிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. வாரிசு படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதலே ரசிகர்களுக்கு அனைத்து விஷயங்களும் ஆச்சரியமாகவே உள்ளது. விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கூட்டணி அமைத்ததே பலரும் எதிர்பார்க்காத விஷயமாக இருந்தது. அதைத்தொடர்ந்து இப்படம் வழக்கமான கமர்ஷியல் படமாக இருக்காது என்ற தகவலும், விஜய் இப்படத்தில் சற்று வித்யாசமாக இருப்பார் என்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாவதால் இப்படத்தின் மூலம் விஜய் தெலுங்கிலும் அறிமுகமாகிறார்.
வாரிசு திரைப்படத்தின் மூலம் விஜய் ரசிகர்களுக்கு சற்று வித்யாசமான அனுபவத்தை கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வாரிசு படத்தின் 4 ஆம் கட்ட படபிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் 2023 பொங்களுக்கு வாரிசு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் வியாபாரம் தற்போதே தொடங்கி விட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய ஓடிடி தளம் ஒன்று 100 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் வாரிசு படத்தின் சாட்டிலைட் உரிமம் 70 கோடிக்கு மேல் வியாபரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஓடிடி வெளியீடு, சாட்டிலைட் மற்ற வியாபாரம் என மொத்தமாக 200 கோடிக்கு மேல் வாரிசு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சம்பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் இப்படத்திற்காக 118 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. மற்ற நடிகர்களின் சம்பளம் உட்பட வாரிசு திரைப்படம் உட்பட மொத்தமாக இப்படத்தின் பட்ஜெட் 200 கோடி என கூறப்படுகிறது. இதன் காரணமாக வாரிசு வெளியாவதற்கு முன்பே 200 கோடி வசூல் செய்துள்ளதாக ரசிகர் தற்போது உற்சாகமாகி உள்ளனர்.
– தினேஷ் உதய்









