#TVK கட்சி பணிகளில் வேகம் காட்டும் விஜய்…! நாளை தவெக கொடி அறிமுகம்…

தமிழக வெற்றிக் கழகக் கொடியை நாளை  அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுக விழா நாளை நடக்கவுள்ள நிலையில், அன்று காலை 9 மணிக்குள் கட்சிக்கொடியை…

தமிழக வெற்றிக் கழகக் கொடியை நாளை  அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுக விழா நாளை நடக்கவுள்ள நிலையில், அன்று காலை 9 மணிக்குள் கட்சிக்கொடியை விஜய் ஏற்றவுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் எண்ட்ரி ஆனார் நடிகர் விஜய். முதல் மாநாட்டுக்குத் தயாராகி வரும் அவர் அதற்கு முன்பாக, நாளை கட்சியின் கொடியை அறிமுகம் செய்யவுள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 7 மணிக்கு மேல் இந்நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. காலை 11 மணிக்குள்ளாக  கட்சியின் கொடியை ஏற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொடி அறிமுக விழாவில் கட்சியின் மாவட்ட தலைவர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். செப்டம்பர் இறுதியில் விக்கிரவாண்டியில் மாநாடு நடக்கவுள்ளதாகவும் அதற்குள் கொடியை தமிழ்நாடு முழுவதும் பிரபலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.