சீரடி சாய்பாபா கோயிலில் விஜய் வழிபாடு…!

தவெக தலைவர் விஜய் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான் வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டுள்ளது.

இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் நேற்று திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் வழிபாடு செய்தார்.

இந்த நிலையில் இன்று அவர் மகாராஷ்ராவில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் அவர் புறப்பட்டார். சீரடிசாய் பாபா கோயிலில் விஜய் தரிசனம் செய்யும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

https://x.com/ANI/status/2049415155210227933?s=20

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.