விஜய் இன்று தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்க அவரது கடின உழைப்பே
காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கீரா இயக்கத்தில் நடிகர் ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள
இரும்பன் திரைப்படத்ததின் இசை வெளியீட்டு விழாவானது சென்னை சத்யா
மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும்
படகுழுவினர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது மேடையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த விழாவில் நாயகன் ஶ்ரீ காந்த் தேவா. நாங்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அவரது திறமைக்கான உயரத்தை தொடவில்லை என்பது என்னுடைய கருத்து
மற்றும் ஆதங்கம். காலம் அவருக்கு இன்னும் நல்ல வாய்ப்பை கொடுக்கவில்லை என தெரிவித்தார்.
அத்துடன், நீங்கள் சினிமாவிற்கு வருவதற்கு உங்கள் தாத்தாவுடைய பெயர் தேவை
பட்டிருக்கலாம். ஆனால் இதில் நிலைக்க உங்கள் கடின உழைப்பு தேவை.அவரின்
பெயருக்கு பின்னால் நிறைய வழிகள் இருக்கு. 40 வயதில் தான் சினிமாவிற்கு வந்தார்.
பட்டினியுடன் சிலம்பம் கற்றுக் கொண்டார்.அதனால் தான் அவரை வாத்தியார் என்று
அழைப்பார்கள், எனக்கு சிலம்பம் தெரியும் என்பதால் சொல்கிறேன். எம்ஜிஆர்
சண்டையை போல் இன்று சண்டையிட எந்த ஒரு நடிகரும் இல்லை என தெரிவித்தார்.
மேலும், என்னுடைய தம்பி விஜய் அவர்கள் திரைக்கு வருவதற்கு எஸ்ஏசி உதவிரியிருக்கலாம். ஆனால் அவரின் கடின உழைப்பால் தான் அவர் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். நானும் பாரதி ராஜாவும் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார், அவர் நடனம் மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் இந்தியாவில் அவரைப் போல் ஆட ஆள் இல்லை என கூறியதாக தெரிவித்தார்.
அத்துடன், தனுஷிற்கு திரைக்கு வர செல்வ ராகவனும், கஸ்தூரி ராஜாவும் உதவியிருக்கலாம். ஆனால் அவரது கடின உழைப்புதான் இன்று அவர் நிலைத்து நிற்க காரணம். இந்த படத்திற்கு முதலில் குறவர் என்று பெயர் வைத்தார்கள். நான்தான் மாற்ற சொன்னேன். தமிழில் தோன்றிய முதல் குடி குறவர் குடி, இந்த படத்தில் வருவர்கள் குறவர்கள் இல்லை என தெரிவித்தார்.