விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்: நடிகர் அருண் விஜய் பேட்டி!

விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் என நடிகர் அருண் விஜய்  தெரிவித்துள்ளார். திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: “அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம்…

விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் என நடிகர் அருண் விஜய்  தெரிவித்துள்ளார்.

திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:

“அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தால் மன நிம்மதியும் தெளிவும்
கிடைக்கிறது. வருங்கால தலைமுறைக்கு கடவுள் பக்தி இருக்க வேண்டும். அப்போது தான் தெளிவான முடிவை எடுக்க முடியும். வணங்கான் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெறவுள்ளது.

நானும் ரஜினி ரசிகர் என்பதால் ஜெயிலர் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம். புதியவர்கள் அரசியலுக்கு வருவது அனைவருடைய விருப்பம்” என தெரிவித்தார்.

மேலும் நடிகர் சங்க கட்டடம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அருண் விஜய், இதுதொடர்பாக நடிகர் கார்த்தியிடம் பேசியுள்ளதாகவும், கூடிய விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.