மாரடைப்பால் உயிரிழந்த நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்; ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

மாரடைப்பால் உயிரிழந்த நியூஸ் 7 தமிழ் மானாமதுரை செய்தியாளர் ரஞ்சித் குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். நியூஸ் 7 தமிழ் மானாமதுரை செய்தியாளராக பணிபுரிந்த…

மாரடைப்பால் உயிரிழந்த நியூஸ் 7 தமிழ் மானாமதுரை செய்தியாளர் ரஞ்சித் குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

நியூஸ் 7 தமிழ் மானாமதுரை செய்தியாளராக பணிபுரிந்த 38 வயதான ரஞ்சித் கடந்த மாதம் 28-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இது குறித்து அறிந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருப்பத்தூரில் நடைபெற்ற நடைபயண நிகழ்ச்சியின்போது ரஞ்சித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்.

பத்திரிக்கையாளர் சங்க தலைவர் பொன்ராஜிடம் நிதியுதவியை வழங்கினார். மக்களுக்காக உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு அரசு சார்பில் காப்பீடு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.