மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் விருந்து; மெனு முழு விவரம்!

நடிகர் விஜய்  மாணவ, மாணவிகளை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்படும் விருந்தில் வைக்க இடம் பெறும் உணவு வகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும்…

நடிகர் விஜய்  மாணவ, மாணவிகளை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்படும் விருந்தில் வைக்க இடம் பெறும் உணவு வகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்டோர் அந்தந்த தொகுதிகளை சார்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

காலை 6 மணி முதல் ஒவ்வொரு ஊரிலிருந்தும் தொகுதி சார்பில் வாகனங்கள் மூலம் மாணவர்களும் பெற்றோர்களும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்காக பொது வெளியில் பேனர், கட் அவுட்டுகள் வைக்கக் கூடாது என ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ஏற்கனவே நடிகர் விஜய் வாய்மொழியாக உத்தரவிட்டிருந்தார். அதனால், பெரிய பேனர்கள் எதுவும் வைக்காமல், சில இடங்களில் போஸ்டர்கள் மட்டும் ஒட்டப்பட்டுள்ளன.

ஏற்கெனவே நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்துள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என 5 ஆயிரம் பேருக்கும் தட புட விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தனியார் உணவக நிறுவன ஊழியர்களை அரங்கத்திற்கு வரவழைத்து உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் காலை உணவாக இட்லி, பொங்கல், வடை, கேசரி வழங்கப்பட்டது.

அதை போல் மதிய உணவாக அவியில் பச்சடி, செள செள கூட்டு, பொறியல், சாம்பார், காரகுழம்பு, அப்பளம், அடைபாயாசம், காலிபிளவர், இஞ்சி துவையல், மாங்காய் ஜாம் உள்ளிட்ட 16 வகை உணவு பரிமாறப்பட உள்ளது.

மேலும் பீடி, சிகெரட், செல்போன், ஸ்மார்ட் வாட்ச், பாக்கு, தீப்பெட்டி, தலை வாரும் சீப்பு போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.