பள்ளிக்கு மாணவர்கள் வர தாமதம் ஆவதால் சொந்த செலவில் ஆட்டோ வாங்கி அதனை தானே ஓட்டி சென்று மாணவர்களை பள்ளிக்கும் ஏற்றிச்செல்லும் ஆசிரியரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த டாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளில் கொத்தப்பள்ளியை சேர்ந்த தினகரன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாமஏரி, கொல்லைமேடு உள்ளிட்ட கிராமங் இருந்து மாணவர்கள் நடந்து வருவதால் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியவில்லை. இதனை உணர்ந்த ஆசிரியர் தனது சொந்த செலவில் ஆட்டோ ஒன்றை வாங்கியுள்ளார்-தனது சொந்த கிராமத்தில் இருந்து காலை 7,30 மணிக்கு புறப்படும் ஆசிரியர் தினகரன் இருசக்கர வாகனத்தை பள்ளியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் கிளம்புகிறார். சாமஏரி, கொல்லைமேடு உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார்.







