“ALTER EGO” என்ன சொல்ல வருகிறார் விஜய்? -லியோ ஸ்பெஷல்!

விஜய் என்றாலே எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். அந்த வகையில் பீஸ்ட், மாஸ்டர், வாரிசு என வரிசையாக குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படங்களை கொடுத்த விஜயின் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் ட்ரீட்டாக அமையுமா என்ற கேள்வியை…

விஜய் என்றாலே எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். அந்த வகையில் பீஸ்ட், மாஸ்டர், வாரிசு என வரிசையாக குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படங்களை கொடுத்த விஜயின் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் ட்ரீட்டாக அமையுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது லியோ. இப்படத்திலிருந்து ஏதாவது ஒரு அப்டேட் வெளியாகாதா? என ஏங்கிக்கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது எதிர்பாராத நேரத்தில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செம சர்ப்ரைஸ் தந்துள்ளார்.

லியோவின் FIRST LOOKஆ, GLIMPSEஆ, அல்லது FIRST SINGLEஆ, என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் நேற்று மாலை 5 மணிக்கு வேற லெவலாக வெளியானது லியோ திரைப்படத்தின் FIRST SINGLEக்கான அறிவிப்பு தேதி. விஜய் இடம்பிடித்திருக்கும் அந்த போஸ்டரில் சில HIDDEN DETAILS கொஞ்சம் என்னவென்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

விஜய்யின் இன்சப்ஷன் ஸ்டோரி லைனில் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அந்த போஸ்டரில் ஒரு ஜன்னல் தெரிகிறது. அது மெர்சல் திரைப்படத்தில் “நீதானே நீதானே” பாடலின் காட்சிகளில் வரும் செட் போலவே உள்ளது. அதற்கு முன்னதாக ஒரு சிங்கத்தின் தலை நெருப்பு வடிவில் இருப்பதைப் பார்க்கின்ற போது காட்டுக்கு எப்படி சிங்கம் ராஜாவோ; அதே போன்று தமிழ் சினிமாவுக்கு வசூல் ராஜாவாக விஜய் இருக்கிறார் என்பதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாகச் சொல்வது போல தெரிகிறது. இப்பொழுது, மெயின் பிக்சரான கதாநாயகன் “தளபதி” விஜய்க்கு வருவோம். கையில் ஒரு பிஸ்டல் உள்ளது. அது 1877களில் தென்கிழக்கு நாட்களில் செய்யப்படும், Webley Mk VI Revolver எனும் பிஸ்டல்.

இது பிரிட்டன் நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த ரகம் மொத்தமே 1 லட்சத்து 25 ஆயிரம் துப்பாக்கிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதனை வடிவமைத்துத் தயாரித்தவர்கள் Webley & Scott எனும் இங்கிலாந்தைச் சார்ந்த துப்பாக்கி தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த வகை துப்பாக்கிகள் முழுக்க முழுக்க இராணுவ வீரர்கள் போர் சமயத்தில் உபயோகிக்க பயன்பட்ட ஒரு வகை துப்பாக்கியாகும்.

6 தோட்டாக்களைச் சுடும் இந்த துப்பாக்கி, தோட்டா இல்லாமல் 1.1 கிலோவும், தோட்டாவோடு கிட்டத்தட்ட 2 கிலோவும் எடை கொண்டதாகும். இதன் மொத்த நீளம் 11.25 அங்குலம் ஆகும். இந்த வகை துப்பாக்கிகள் முதல் மற்றும் இரண்டாம் உலக போர்கள் உட்பட 6 போர்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, விஜய் அணிந்திருக்கும் காப்பு விஜயின் ரசிகர்களுக்கு மாஸ்டர் திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான வாரிசு வரை பரீட்சியமானது தான். விஜய்க்கு அதிர்ஷ்டமாக இருக்கிறதோ இல்லையோ.. அவரது ரசிகர்களுக்கு குதூகலம் தான். விஜய் தனது காப்பை சுழற்றுகையில் ரசிகர்களின் மனமும் சுழன்றுவிடும். பின்னர் அவர் தனது வாயில் வைத்துள்ள சிகரெட்டை கண்டுகொள்ளாமல் கீழே பார்த்தால் ஒரு சிலுவை வடிவிலான கத்தியை அணிந்துள்ளார். பீஸ்ட் திரைப்படத்தில் துணை நடிகையின் கண்ணாடியை வைத்து தனது கை கட்டப்பட்டிருக்கும் கட்டை அவிழ்ப்பார், அதேபோல இதில் கழுத்தில் தொங்கப்பட்டுள்ள கத்தியை அவசர காலங்களில் உபயோகிப்பாரோ எனும் எண்ணமும் எழுகிறது.

பிறகு, விஜயின் இடுப்புக்கு அருகே எழுதப்பட்டிருக்கும் ஆங்கில வார்த்தைகளில் “ALTER EGO” எனும் வார்த்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் புதிதாக இருந்தாலும், அந்த வார்த்தைக்கான அர்த்தம் பலருக்கும் பரிட்சியமானதே. ”ALTER EGO” என்றால் என்னவென்று ஒரே வரியில் சொல்வேண்டும் என்றால், ஒரே ஆள் வேறு வேறு நேரத்தில் வேறு வேறு பணிகளை செய்பவர் என அர்த்தம். உதாரணத்திற்கு S J சூரியாவின் வசனம் ஒன்று இருக்கும், “இருக்கு, ஆனால் இல்ல, இருக்கு. இருக்குறது வேற மாதிரி இருக்கு” எனும் வசனமாகும் அல்லது அந்நியன் படத்தின் விக்ரம் போல.

இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், ஸ்பைடர் மேன் திரைப்படத்தில், கதாநாயகன் சாதாரண இளைஞனாகவும் இருப்பார், ஸ்பைடர் மேனாகவும் இருப்பார். ஆக லியோ திரைப்படத்தில் விஜய் ஒற்றை வேடமா அல்லது இரட்டை வேடமா என ரசிகர்கள் தவித்து வந்த நிலையில், விஜய் இதில் டபுள் ஆக்‌ஷன் என அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. என்னதான் விஜய் மெர்சல், பிகில் என பல திரைப்படங்களில் டபுள் ஆக்‌ஷனில் நடித்திருந்தாலும் இது லோகேஷின் செய்கையாக இருப்பதால் ரசிகர்கள் இன்னும் ஆவலுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

கீழே ரசிகர்கள் பலர் பெரிய ஜக்குகளில் மதுபானத்தைக் கையில் வைத்து ஆடுவது போன்று இருக்கிறது. இது ஒரு கவர்ச்சி நடனமாகக் கூட இருக்கலாம். ஏனெனில் சில நாட்களுக்கு முன்பு சென்னை பிரசாத் லேபில் 2000 பேர் நடனத்தில் ஒரு பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நடிகை மடோனா செபாஸ்டின் கலந்துள்ளதாகவும் ஒரு செய்தி பரவியது.

இந்த ஸ்டில் அந்த பாடல் காட்சியின் ஒரு அங்கமாக கூட இருக்கலாம், அவ்வாறு இருந்தால் அது பாகுபாலி 1-ன் ”மனோகரி” , சலீமின் ”மஸ்காரா” , புஷ்பாவின் “ஓ சொல்றியா மாமா” திரைப்படப் பாடல் பாடல் போன்று ரசிகர்களின் கண்களுக்கு ஒரு விருந்து படைப்பதில் ஒன்றாக இருக்கும்.

இந்த படம் “LCU”வில் வருவது 100/100 சதவீதம் இந்த போஸ்டரிலேயே நிரூபணமாகிறது. எப்படியெனில், லியோ பட டைட்டில் வரும் வீடியோ காட்சிகளில் இருக்கும் சாக்லேட் ஃபேக்டரியில் போதை பொருள் சம்பந்தப்பட்ட பொருட்களின் காட்சிகள் வருவது போல் இங்கு சாக்லேட் நிறுவனத்தில் வேலை செய்யும் விஜய், கொக்கோ விதைகளிலிருந்து எடுக்கப்படும் கொகைனை இந்த இடத்தில் விநியோகிக்க வருபவராகவும் இருக்கலாம்.

முடி திருத்தியிருக்கும் ஸ்டைலை பார்த்தால் அவர் ஒரு போலீஸாகவும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. தெறி படத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரியான விஜயகுமாராக இருந்து, சில பிரச்சினைகளால் அதிலிருந்து விலகி சராசரியான வாழ்க்கையில் வாழும் ஜோசஃப் குருவிலா போல், காலையில் போலீஸாகவும், மாலையில் ஒரு போதை மாஃபியாவாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. மாஸ்டர் திரைப்படத்தில் தனக்கு வேலை செய்யும் சிறுவர்களுக்குப் போதை மருந்துகளை விநியோகித்து அவர்களிடமிருந்து வேலை பெற்றுக்கொள்ளும் விஜய் சேதுபதி போல, இளைஞர்களை மது பழக்கத்திற்கு அடிமையாக்கி வேலை வாங்கும் ஒரு கேங்ஸ்டராக இருக்கவும் அதிகமாக வாய்ப்புள்ளது.

இருப்பினும் மேலும் சில இந்த படத்தை பற்றியும், இதில் விஜயின் கதாபாத்திரம் பற்றியும் அறிந்து கொள்ள ஜூன் 22 வரை உங்களுடன் நாங்களும் ரொம்ப ஆர்வமா காத்திருக்கிறோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.