விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி படம் செப்டம்பர் 1-ல் வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. இவருடன் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் குஷி. இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை, ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வரும் செப்.1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
சமீபத்தில் குஷி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், குஷி திரைப்படம் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ் பதிப்பும், சில திரையரங்களில் தெலுங்கு பதிப்பும் வெளியாகவுள்ளது.







