வியட்நாம் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 56 பேர் பலியான சோகம்!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 56 பேர் உயிரிழந்தனர். தலைநகர் ஹனோய் நகரில் உள்ள 9 அடுக்கு கட்டட குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை இரவு தீ…

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 56 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் ஹனோய் நகரில் உள்ள 9 அடுக்கு கட்டட குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வீடுகளில் இருந்த பெரும்பாலானவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 56 பேர் மருத்துவமனையில் பலியாகினர். 37 பேருக்கு தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு குறுகலான பகுதியில் உள்ளதால் தீயணைப்பு வண்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.