காந்தாரா 2 திரைப்படத்திற்காக நடிகர் ரிஷப் ஷெட்டி 11 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா. கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகும் என ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
காந்தாரா – 2 படப்பிடிப்பு நவம்பர் 1 ஆம் தேதி துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, மங்களூருவில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்காக நடிகர் ரிஷப் ஷெட்டி 11 கிலோ வரை உடல் எடையைக் குறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் திடமான உடலில் காணப்பட்டவர் இரண்டாம் பாகத்திற்காக எடையைக் குறைத்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.