வியட்நாம் நாட்டின் குவாங் நாம் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனை காரணமாக அந்த மாகாணத்தின் ஹங்க், டா நங், ஹைய் அன் ஆகிய நகரங்களில் வெள்ளப்பெருக்கு கடும் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வியட்நாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 5 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.







