முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

’விடுதலை’ படத்தின் முதல் பாடல் – தனுஷுக்கு நன்றி தெரிவித்த சூரி

விடுதலை திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஒன்னொடு நடந்தா’ பாடல் இன்று வெளியானது. இந்தப் பாடலை பாடியதற்காக நடிகர் தனுஷுக்கு, சூரி நன்றி தெரிவித்துள்ளார்.

அசுரன் திரைப்படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி, சூரியை வைத்து விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். சூரி போலீசாக இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. ஓராண்டுக்கும் மேலாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாடலான ‘ஒன்னொடு நடந்தா..’ என்ற பாடல் இன்று வெளியானது. இளையராஜா இசையில் தனுஷ் இந்த பாடலை பாடியுள்ளார். எழுத்தாளர் சுகா இந்த பாடலை எழுதியுள்ளார்.

இந்த பாடலை பாடியதற்காக நடிகர் தனுஷுக்கு சூரி நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சூரி தனது ட்விட்டர் பதிவில்,  ”சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலை பாடி தந்த தனுஷுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.இந்த படைப்பில் உங்களின் இந்த பங்களிப்பு எங்களுக்கு எல்லாம் பெருமை” என்று குறிப்பிட்டுள்ளார். சூரியின் இந்த பதிவை ரீ-ட்விட் செய்த தனுஷ், லவ் யூ என்று பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடியரசுத் தலைவர் தேர்தல் – வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

Mohan Dass

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு

G SaravanaKumar

சாப்பிட தட்டு தர தாமதமானதால் திருமண நிகழ்ச்சியில் தகராறு – கேட்டரிங் ஊழியர் உயிரிழப்பு

Web Editor