தமிழ் நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தின் போதும் முதலமைச்சராக பதவியேற்ற பிறகும் கூட தவெக ஆட்சியில் லஞ்சம் மற்றும் ஊழல் இருக்காது என்று விஜய் கூறி வந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில் தவெக ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி என்பவர் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் தனது அலுவலகத்தில் வைத்து லஞ்சம் வாங்கியதாக வீடியோ ஒன்று வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தவெக ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.




