தீபாவளிப் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா, தங்களது இரட்டைக் குழந்தைகளை கையில் ஏந்தியவாறு தீபாவளி வாழ்த்துக்களை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான, தீபாவளிப் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இனிப்புகளை பரிமாறிக் கொண்டு, புத்தாடை உடுத்தி, பட்டசுகள் வெடித்து மக்கள் இந்த பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காலை முதலே திரைத்துறையினர் பலரும் தங்கள் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், தனது வீட்டின் முன்பு காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடினார். நடிகை ராதிகா, சுர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தினருடன் இன்று தீபாவளியைக் கொண்டாடினார். தொடர்ந்து பல்வேறு நடிகர், நடிகைகள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி, தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறியுள்ளனர். தனது இரட்டைக் குழந்தைகளை கையில் ஏந்தியவாறு “Happy Diwali Everyone” என அவர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.