மகாராஷ்ராவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பந்தாராவில் மாவட்ட பொது மருத்துவமனை அமைந்துள்ளது. இங்குள்ள குழந்தைகள் சிகிச்சை பிரிவில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு சிகிச்சை பெற்று வந்த 10 பச்சிளம் குழந்தைகள் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேநேரம், 7 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்த, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.