#VettaiyanUpdate – ரூபா எனும் கதபாத்திரத்தில் ஆக்‌ஷனில் அதிரடி காட்டும் #RithikaSingh

வேட்டையன் திரைப்படத்தில் நடிகை ரித்திகா சிங்கின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன்,…

#VettaiyanUpdate - #RithikaSing in action as Rupa

வேட்டையன் திரைப்படத்தில் நடிகை ரித்திகா சிங்கின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தற்போது இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சில நாள்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள் : லால் சலாம் | தொலைந்து போன பகுதி #OTT-ல் சேர்ப்பு – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவித்தனர். இந்த நிலையில், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களை இன்று முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இதன் ஒருபகுதியாக நடிகை ரித்திகா சிங்கின் கதாபாத்திரத்தை படக்குழு அறிவித்துள்ளது. இதன்படி ரித்திகா சிங் இப்படத்தில் ரூபா எனும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.