#Vettaiyan கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் படக்குழு – இந்த வாரம் முழுக்க சரவெடி அப்டேட்!

வேட்டையன் திரைப்படத்தின் கதபாத்திரங்களை இந்த வாரம் முழுக்க அறிமுகம் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன்…

iOS 18 #SoftwareUpdate for Apple Mobile - out today!

வேட்டையன் திரைப்படத்தின் கதபாத்திரங்களை இந்த வாரம் முழுக்க அறிமுகம் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தற்போது இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சில நாள்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள் : ஆப்பிள் மொபைலுக்கான iOS 18 #SoftwareUpdate – இன்று வெளியாகிறது!

திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவித்தனர். இந்த நிலையில், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களை இன்று முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த ஒருவாரத்திற்கு தொடர்ச்சியாக அப்டேட்கள் வரும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.