ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. என்கவுன்ட்டர் குறித்து பேசியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இத்திரைப்படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.65 கோடியை வசூலித்ததாக கூறப்பட்டது. 2 நாட்களையும் சேர்த்து இத்திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளையும் (அக்.13) விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

இந்த ஆண்டின் ரூ.100 கோடி வசூலித்த படங்கள்:
- சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’
- விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’
- தனுஷின் ‘ராயன்’
- விஜயின் ‘தி கோட்’
- இந்த வரிசையில் தற்போது ரஜினியின் ‘வேட்டையன்’ படமும் இடம்பெற்றுள்ளது







