வெந்து தணிந்தது காடு 2-ம் பாகம் வருமா? இயக்குநர் கௌதம் மேனன் பதில்

சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர்…

சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் சிலம்பரசன் ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கெளதம் வாசுதேவ் மேனன் பேசியதாவது:

முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்றுதான் தொடங்கினோம். 3 மாதம் பணிபுரிந்தோம். ரகுமான் மூன்று பாடல்களை கொடுத்திருந்தார். எழுத்தாளர் ஜெயமோகனை பார்த்தபிறகு புதிய‌ ஹீரோவை வைத்து எடுக்கலாம் என்று இருந்தோம். தயாரிப்பாளர் கதையைக் கேட்டு இப்படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டார். இவர்கள் கொடுத்த ஆதரவு தான் நான் இங்கு நிற்பதற்கு காரணம்.

சிம்புவுடன் பணிபுரிவது எப்போதுமே எதிர்பார்ப்பாக இருக்கும். விண்ணைத் தாண்டி வருவாயா போன்று ஒரு படத்தை லாக்டவுனில் பண்ணினோம். சிம்பு நடித்துக் கொடுத்தார். இது உண்மையான மனிதரின் கதை. வாழ்க்கையை மூன்று மணியில் சொல்லியுள்ளது. இது இதனுடன் முடிவதல்ல தொடரும். ஜெயமோகனின் கதை. உங்களுடைய ஜானரில் இருந்து மாறி நன்றாக எடுத்துள்ளீர் என்றார் அவர். எல்லோருடைய வாழ்விலும் பொண்ணுங்க இல்லாமல் பகுதி இருக்காது. ஒரிஜினல் கதையில் காதல் இல்லை. அவருடைய அனுமதியுடன் காதலை இப்படத்தில் இணைத்தேன்.

ரகுமானுடன் சினிமா பற்றித்தான் பேசுவேன். இப்படம் பாடல்கள் நிறைந்த படம். தாமரை அழகான வரிகளை எழுதியுள்ளார். நல்ல அனுபவமாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரங்களில் விடிவி கார்த்திதான் தான். ஜெஸ்ஸியும் நான்தான். மறக்குமா நெஞ்சம் நள்ளிரவு 2.30 மணிக்குத்தான் உருவானது. ஏ.ஆர்.ரகுமான் கால் செய்து அந்தப் பாடலை கொடுத்தார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் கூட்டணி இதோடு முடியாது தொடரும் என்றார் கெளதம் வாசுதேவ் மேனன்.

Image

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், “கௌதம் மேனன் ஒரு இசை‌க் காதலன். எது கொடுத்தாலும்‌ எடுத்துக் கொள்வார். நம்பிக்கை அது. 5 பாடல்களில் 4 பாடல்களை இப்படத்தில் பயன்படுத்தியுள்ளோம். தாமரை எழுதினால் அப்பாடலில் மேஜிக் நிகழ்ந்துவிடும். ஒரு பாடல் மாதிரி இன்னொன்று என்று கேட்டாலே அது பழசு ஆகிவிடும். புதுசு தான்‌ வேண்டும். இந்த கப்பலை கௌதம் ஒழுங்காக கரைசேர்த்துவிடுவார்‌ என்ற நம்பிக்கை. சிம்புவுக்காகவும் இப்படத்தை ஒப்புக் கொண்டேன்.


இளையராஜா மற்றும் நான் இருவரும் ஒரே விமானத்தில் வந்தோம். இளையராஜா போட்டோ எடுக்கச் சொன்னார். அதனால் எடுத்தேன்” என்றார்.

நடிகை ராதிகா பேசுகையில், “கௌதம் மேனன் மற்றும் அவரது குழுவிற்கு வாழ்த்துகள். இங்கு இரண்டு நாயகர்கள் உள்ளனர். ரகுமான் மற்றும் சிம்பு இருவரும்தான். சிம்புவை எனக்கு சின்ன வயதில் இருந்தே தெரியும். இப்படத்தில் அதிரடியான சிம்புவை‌ பார்க்க போகிறீர்கள். படத்தில் சிம்பு டைனமிக்காக உள்ளார். டிரைலரைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்றேன். இப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.