தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தங்களது நோக்கம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், சீர்குலைந்துள்ள தமிழகத்தின் பொருளாதாரத்தை, ஒன்றை டிரில்லியன் டாலராக உயர்த்துவதே மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம் எனக்கூறினார்.
நரகத்தை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தால் தெரிந்துக்கொள்வர் எனக் கூறிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை முற்றிலுமாக மாற்றப்படும் எனவும் அறிவித்தார்.







