ஐபிஎல் டி20 லீக் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேப்பாகத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டகார்களான ரோகித் சர்மா மற்றும் தி காக் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் பின்னர் தி காக் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ,சுர்ய குமர் யாதவ் , இஷான் கிஸன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய போலார்டு அதிரடியாக ஆடிய நிலையில், புவனேஸ்வர் பந்தில் 104 மீட்டருக்கு 6 அடித்தது ரசிகர்களிடையே நெகிழச்சியை எற்ப்படுத்தியது. ஆட்ட நேர முடிவில் ஹைதராபாத் அணிக்கு 151 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.







