பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீரபத்திர சுவாமி கோயில் திருவிழாவில் குருமன்ஸ் இன மக்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பில்லி சூனியம் ஏவல் நீங்க வேண்டி சாட்டையடி பெற்றும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே மூக்காரெட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள வீரபத்திர சுவாமியை குருமன்ஸ் இன மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊர்க்கவுண்டர் நாகராஜ் தலைமையில் கோயில் திருவிழா நடைபெற்றது.
இதில் குருமன்ஸ் இன மக்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பில்லி, சூனியம், ஏவல் நீங்க வேண்டி சாட்டையடி பெற்றும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். இதில் 1000-க்கும் மேற்பட்ட குருமன்ஸ் இன மக்கள் ஒன்று சேர்ந்து பாரம்பரிய முறைப்படி வாத்திய இசை முழங்க வீரபத்திர சுவாமி பூங்கரத்தை தலையில் சுமந்தவாறு நடனமாடியும், சுவாமிக்கு மாலை பிடித்தல், நீர் காயாடுதல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்தனர்.
அனகா காளமேகன்






