தமிழக சட்டமன்ற தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான பணிகள் இன்று தொடங்கியது.
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் தாக்கல் காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டமன்ற தேர்தலில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆறு தொகுதிகளுக்குப் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனுவை இன்று முதல் வரும் திங்கள்கிழமை (மார்ச்-8) வரை தாக்கல் செய்யலாம்.
திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களைத் தேர்வுச் செய்வதற்கான பணிகளில் விசிக மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தேர்வுச் செய்தபிறகு எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக குழுவினருடன் கலந்துபேசி இன்னும் ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என திருமாவளவன் கூறியுள்ளார்.