பாஜகவில் இணைந்தார் முன்னாள் திரிணாமூல் எம்.பி தினேஷ் திரிவேதி!

சமீபத்தில் திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகிய அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி இன்று பாஜகவில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் மார்ச் 27ல் தொடங்கி 8 கட்டங்களாக நடைபெற உள்ள…

சமீபத்தில் திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகிய அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி இன்று பாஜகவில் இணைந்தார்.

மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் மார்ச் 27ல் தொடங்கி 8 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகிய மக்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி இன்று, நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

மேற்கு வங்கம் உட்பட நான்கு மாநிலங்களில் 824 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்திற்கு மார்ச் இறுதியில் தேர்தல் தொடங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி “வங்கம் வன்முறையின் பிடியில் சிக்கியிருக்கும்போது, என்னால் நிம்மதியாக இங்கு அமர்ந்திருக்க முடியவில்லை” என தனது ராஜினாமாவை மக்களவையில் திடீரென அறிவித்தார் திரிவேதி. இது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது அவர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.