வத்தலண்டில் 100 ஆண்டுகள் பழைமையான ஜும் ஆ பள்ளிவாசலுக்கு முதன்முறையாக நிர்வாக குழு தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டின் பெரியபள்ளிவாசல் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த பள்ளியில் கடந்த ஆண்டு முதல் தேர்தல் மூலம் நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்து வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி. சந்திரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தேர்தலில் ஆண்கள் மட்டுமே வாக்களிக்கும் நிலையில் 970 பேர் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் களத்தில் ஆர்.ரஹ்மான் ஜமாத் கமிட்டி, நமது ஒற்றுமை ஜனநாயக ஜமாத் கமிட்டி, பரிமளா சுன்னத் ஜமாத் கமிட்டி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தல் வத்தலகுண்டு இக்பாலியா உயர்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது. நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.