உள் ஒதுக்கீடு ரத்து: ”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது”

வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததையடுத்து நியூஸ்7 தமிழுக்கு தவாக வேல்முருகன் பிரத்யேக பேட்டி அளித்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது என…

வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததையடுத்து நியூஸ்7 தமிழுக்கு தவாக வேல்முருகன் பிரத்யேக பேட்டி அளித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து, நியூஸ்7 தமிழுக்கு தவாக வேல்முருகன் பிரத்யேக பேட்டி அளித்தார்.

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டுக்கு, முறையான ஆய்வுகள், தரவுகள் தரப்படாததை காரணம் காட்டியே உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மாநில அரசுகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்க உரிமையுள்ளது ஆனால் முறையான தரவுகள், சட்டப்பிரிவுகளை இணைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என அவர் கூறினார்.

https://twitter.com/VelmuruganTVK/status/1509410155816882180

கடந்த அதிமுக அரசு அவசரகதியில் வாக்கிற்காக இச்சட்டத்தை இயற்றியது என்றும் உள் ஒதுக்கீடு செல்லாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வன்னியர்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்ற கூற்றின் அடிப்படையில் தேவையான சட்ட ஆவணங்களை இணைத்து போர்கால அடிப்படையில் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர் கேடுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.