அமைச்சரவையில் வன்னி அரசு: ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அங்கீகாரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி…!

விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அங்கீகாரம் என்று அமைச்சர் ராஜ் மோகன் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர், “தமிழ் நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் நேரில் வந்து பார்ப்போம். எனவே தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டுப் பொறுப்புணர்ச்சி” என்றார்.

புத்தகப்பைக் பற்றி சமூக வலைதளங்களில் எழுந்துள்ள சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்த குறிப்பிட்ட பள்ளிக்கூடத்தில் ஏற்கனவே அந்த குழந்தைகளுக்கு பேனா பென்சில் பை வாங்கி கொடுத்து இருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் பேக்கை வாங்கியதால் பள்ளியில் இருக்கக்கூடிய குழந்தைகளும் அந்தப் பையை வாங்கிவிட்டு பைக்குள் இருந்த பொருள்களை ஏற்கனவே இருந்த புது பையில் வைத்து விட்டு போகும் போது விளையாட்டாக புது பையை தூக்கி எறிந்து இருக்கிறார்கள். இதை சிலர் போட்டோ வீடியோ எடுத்து இருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் அந்தப் பையை எடுத்து வைத்திருக்கிறார்கள் எவ்வளவோ ஏழை குழந்தைகள் இருக்கிறார்கள் உரிய முறையில் மற்ற குழந்தைகளுக்கு அது கொண்டு சேர்க்கப்பட்டது. அனைவருக்கும் சமமாக கொண்டு சேர்ப்பது தான் இந்த திட்டம் ஒரு இடத்தில் நடந்தது. சமூக வலைதளத்தில் சுட்டி காட்டப்பட்டதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் அதை பறிமுதல் செய்துவிட்டார்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “வன்னியரசு தோழருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்திருப்பது தனிப்பட்ட மனிதருக்கானது இல்ல. நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அங்கீகாரம். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது குரலற்றவர்களுக்கு குரலாக இருப்பதற்கான அடையாளம். கூட்டணி என்கிற பெயரில் அவர்கள் முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு வாக்குகளை மட்டும் வாங்கிவிட்டு அவர்களுக்கான அங்கீகாரத்தை தராமல் இருந்தார்கள். முதல்முறையாக தமிழக அரசியலில் மாண்புமிகு முதல்வர் அதை நிறைவேற்றி காட்டி இருக்கிறார்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.