தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வந்தது. அதன் படி நேற்று முன் தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,350-க்கும், சவரனுக்கு ரூ.1,680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,06,800-க்கும், விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்றும் குறைந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13, 140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
சரிந்து வந்த தங்கம் விலை சர்வதேச சந்தையில் நிலவும் மந்தநிலையின் காரணமாக இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும், சவரன் ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,760-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




