சக்கரம் சேதம்: பாதியில் நின்று மீண்டும் சர்ச்சைக்குள்ளான வந்தே பாரத் விரைவு ரயில்

வந்தே பாரத் விரைவு ரயில் ஏற்கனவே இரண்டு முறை மாடு மீது மோதிய நிலையில், இன்று சக்கரம் கழண்டு பாதியில் நின்று மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.   மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் 3-வது…

வந்தே பாரத் விரைவு ரயில் ஏற்கனவே இரண்டு முறை மாடு மீது மோதிய நிலையில், இன்று சக்கரம் கழண்டு பாதியில் நின்று மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

 

மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் 3-வது விரைவு ரயில் சேவையை கடந்த 30-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மும்பை முதல் குஜராத்தின் காந்திநகர் வரை செல்லும் இந்த ரயில் முதல் நாள் செல்லும்போதே தண்டவாளத்தில் நின்ற மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ரயிலின் முன்பகுதி சேதமடைந்ததால், அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி பேசுப்பொருளாக மாறியது. முதல் நாளிலேயே விபத்து என பலரது விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக அடுத்த நாளே சர்ச்சையில் சிக்கியது.

 

அதேபோல் மாடு மீது மோதி பாதிவழியில் வந்தே பாரத் ரயில் நின்றது. இந்நிலையில் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கி சேவை பாதிக்கப்பட்ட வந்த நிலையில், இன்று மீண்டும் 3-வது முறையாக வந்தே பாரத் ரயில் சேவை பாதிக்கப்பட்டது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டெல்லி -வாரணாசி இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலின் சக்கரங்கள் சேதமடைந்ததால் வழியிலேயே நின்றது. இதனால், சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் காத்திருந்து தவிப்புக்கு ஆளாகினர்.

பின்னர் ரயில்வே ஊழியர்கள் இந்த கோளாறை கண்டறிந்து ரயிலை நிறுத்துமாறு ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளை எச்சரித்ததாக கூறப்படுகிறது. 20 கிமீ தூரத்தில் உள்ள குர்ஜா ரயில் நிலையத்திற்கு கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து, ரயிலில் இருந்த பயணிகள் சதாப்தி விரைவு ரயிலுக்கு மாற்றப்பட்டனர்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.