ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட் தமிழ்நாடு வந்துள்ள ரவீந்திர ஜடேஜா வணக்கம் சென்னை என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரஞ்சி கோப்பை 2022-2023 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி கடந்த 20ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் அசாம் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் தமிழ்நாடு அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய நட்சத்திர ஆல் ரவுண்டர் கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா சென்னை வந்துள்ளார். ரஞ்சி கோப்பை போட்டியில் சௌராஸ்டிரா அணி சார்பில் ரவீந்திர ஜடஜே விளையாவுள்ளார். செள்ராஸ்டிரா-தமிழ்நாடு அணி மோதும் போட்டி செவ்வாய்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக அவர் தமிழ்நாடு வந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், வணக்கம் சென்னை என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/imjadeja/status/1617098105484365831
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஜடேஜா காயத்தில் இருந்து திரும்பியது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. இதுவரை 114 போட்டிகளில் 169 இன்னிங்சில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 333 ரன்கள் எடுத்துள்ளார்.







