வளர் 4.0- தொழில் புரட்சியை ஏற்படுத்தும்- அமைச்சர்

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் உருவாக்கப்பட்டுள்ள வளர் 4.0 (Valar 4.0) வலைத்தளத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொழில் துறை, ஆராய்ச்சி மையங்கள், கல்வித்துறை நிபுணர்களை இணைக்கும்…

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் உருவாக்கப்பட்டுள்ள வளர் 4.0 (Valar 4.0) வலைத்தளத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொழில் துறை, ஆராய்ச்சி மையங்கள், கல்வித்துறை நிபுணர்களை இணைக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வளர் 4.0 (Valar 4.0) வலைத்தளம் உருவக்கப்பட்டுள்ளது.

தலைமை செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இணைந்து valar.tn.gov.in என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் துறைகளின் உயர் அலுவலர்களும் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களை மேம்படுத்த வளர் 4.0 வலைத்தளம் எனவும், எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் மிகப்பெரும் பயனை பெறும் என்றார். இதுவரை 242 நிறுவனங்கள், 122 பயனாளிகள் பதிவு செய்துள்ளதாகவும், 279 சேவைகள், 20 திட்டங்கள், 389 நிபுணர்களின் விவரங்கள் தற்போது கிடைக்கும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், வளர் 4.0- தொழில் புரட்சியை ஏற்படுத்தும் என நம்புவதாகவும், ஆலோசனைகள், தகவல் உள்ளிட்டவை சரியாக கிடைத்தால் உற்பத்தியை பெருக்க முடியும் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.