முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் இன்று திறக்கப்பட்டது.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி கோயிலில் கடந்த 3ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா துவங்கியது. 4-ஆம் தேதி முதல், பகல் பத்து திருநாள் துவங்கி நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். பகல் பத்து திருநாளில் சிறப்பு வாய்ந்த மோகினி அலங்காரம் – நாச்சியார் திருக்கோலம் நேற்று நடைபெற்றது.

இதையடுத்து இன்று வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக நம்பெருமாள் ஆயிரம் கால் மண்டபத்தை அடைந்தார். முன்னதாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சுமார் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெறும் தேர் விழாவை தள்ளி வைக்கக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்பட்டது. இன்று காலை 7 மணி முதல் நம்பெருமாள் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Advertisement:
SHARE

Related posts

மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை

Halley Karthik

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணி இன்று மோதல்!

Halley Karthik

ஆப்கானில் அதிர்ச்சி: விமான சக்கரத்தில் பதுங்கிய 3 பேர் கீழே விழுந்து பலி

Gayathri Venkatesan