பார்ட்டிக்கு சென்ற நடிகைகளுக்கு கொரோனா: பிரபல ஹீரோயின் வீட்டுக்கு சீல்

டின்னர் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகைகளுக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து பிரபல நடிகை கரீனா கபூரின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் கரீனா கபூர். நடிகர் சைப் அலிகானின் மனைவியான இவரும் நடிகை…

டின்னர் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகைகளுக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து பிரபல நடிகை கரீனா கபூரின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் கரீனா கபூர். நடிகர் சைப் அலிகானின் மனைவியான இவரும் நடிகை அம்ரிதா அரோராவும் தோழிகள். அமிர்தா பிரபல நடிகை மலைகா அரோராவின் சகோதரி. இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதை நடிகை கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

“எனக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னை தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என் குடும்பத்தினரும் ஊழியர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது எந்த அறிகுறியும் இல்லை. விரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன் என நம்புகி றேன் என்று கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கரீனாவின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, மும்பையில், கரீனாவின் நெருங்கிய தோழிகள் கலந்துகொண்ட டின்னர் பார்ட்டி ஒன்று சமீபத்தில் நடந்தது. இதில் அமிர்தா உட்பட சில தோழிகள் கலந்துகொண்டனர். அதில் கலந்துகொண்ட ஒருவருக்கு இருமலும் உடல் சோர்வும் இருந்தது. அவர் மூலம் இந்த தொற்றுப் பரவி இருக்கலாம். உடனடியாக கரீனா தொற்று பரிசோதனை மேற்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மும்பை மாநகராட்சி, நடிகை கரீனா கபூர் வீட்டிற்கு சீல் வைத்துள்ளது. அவர் இன்னும் சரியான தகவலை தெரிவிக்கவில்லை என்றும் எத்தனை பேர் அவருடன் தொடர் பில் இருந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க முயன்று வருகிறோம் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.