வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவில் அடிக்கல் நாட்டப்படும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகே, முதலமைச்சருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்களிடையே பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைவருக்கும் புத்தாண்டு, தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், சிவகங்கை பகுதியில் உள்ள கண்மாய்கள், ஏரி குளங்களில் தண்ணீர் நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவில் அடிக்கல் நாட்டப்படும், என்றும் தெரிவித்தார்.







