அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி : அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் வரும் 19ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல்…

அமெரிக்காவில் வரும் 19ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.எனவே அங்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும்பணியில் தீவிரம் காட்டப்பட்டு வருகின்றது. அடுத்தமாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி அளிக்கப்படும் என்று அமெரிக்க அரசு கூறியிருந்தது. இந்நிலையில் முன்னதாகவே அதாவது வரும் 19 ஆம் தேதியில் இருந்தே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.