சிறப்பு தடுப்பூசி முகாம்; அமைச்சர் முக்கிய அறிவிப்பு

பண்டிகை காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கட்டுமான உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கான டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்…

பண்டிகை காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கட்டுமான உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கான டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் சென்னை தி.நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் 342 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். ஊராட்சிகளில் 100 விழுக்காடு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குட்கா போன்ற போதைப்பொருட்களை தடை செய்ய தொடர் நடவடிக்கை எடுத்துவருகிறோம் எனவும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை தடுக்கும் பணியை வணிகர் சங்க பேரமைப்புடன் இணைந்து செயல்படுத்தி வருவதாக கூறினார். மேலும், பண்டிகை காலம் என்பதால் ஞாயிற்றுக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம் இல்லை என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.