நாடு முழுவதும் புதிதாக 35 ஆயிரத்து 662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3 லட்சத்து 40 ஆயிரத்து 639 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 35,662 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 281 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,44,529ஆக அதிகரித்துள்ளது. 33 ஆயிரத்து 798 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 23 ஆயிரத்து 260 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், 131 பேர் உயிரிழந்துள்ளனர்.
https://twitter.com/COVIDNewsByMIB/status/1439098900913164290
இதுவரை 79 கோடியே 38 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் இரண்டரை கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







