தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவி ஏற்றார் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றார். தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப் பட்டதை அடுத்து, நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு நியமிக்கப் பட்டார்.…

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றார்.

தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப் பட்டதை அடுத்து, நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு நியமிக்கப் பட்டார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அவர் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண் டார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்தார். அவரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து அளித்து வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் வரவேற்றனர். தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
உள்ளிட்டோரும் வரவேற்றனர். பின்னர் அங்குள்ள அறையில் சிறிது நேரம் கலந்துரை யாடினர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை ஆர்.என்.ரவி பதவி ஏற் றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப் பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜி.கே.வாசன், ஜி.கே.மணி, அண்ணாமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் புதிய் ஆளுநருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.