முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.53 கோடி மோசடி; ஆசிரியர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.53 கோடி மோசடி செய்து போலி பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் வசித்து வருபவர் பொன்ராஜ். இவர் டிப்ளமோ சிவில் முடித்து விட்டு 2013 – 2014 , 2014 – 2015 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் குரூப் 4 பிரிவுக்கான தேர்வை கடந்த 2014 ஆம் ஆண்டு எழுதி அரசு வேலைக்காக காத்திருந்துள்ளார். இவரது நண்பர் மூலம் சுரண்டை அருகே உள்ள வாடியூர் ஊரைச் சேர்ந்த வியாகப்பன். இவர் பாவூர்சத்திரம் அருகே தனியார் ஆவுடையானூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரர் அதே ஊரைச் சேர்ந்த ஜெயரால் இவர்களை பொன்ராஜுக்கு அறிமுக செய்து வைத்துள்ளார். வியாகப்பன் தனது நண்பர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார். அதனை நம்பி அரசு வேலைக்காக காத்திருந்து கீழப்பாவூர், மடத்தூர், கல்லூரணி, சுரண்டை, ஆலங்குளம், ராஜபாண்டி, உள்பட பல ஊர்களை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் வியாகப்பனை சந்தித்து, பிறகு அரசு வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு ரூ.15 லட்சம் செலவாகும் என்பதை தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பணத்தின் மூலம் தனக்கு நண்பரான அருப்புகோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்த ஜான் தேவபிரியம் என்பரிடம் கொடுத்து வேலை வாங்கி தருவதாக உருதியளித்தார். வியாகப்பன் அவர்களுடைய ஹால் டிக்கட்டுகளை காண்பித்து தங்களால் அரசு வேலை வாங்கி தர முடியும் என நம்பிக்கை ஏற்படுத்தியதின் பேரில் ரூ. 2 லட்சம் முதல் 10 லட்சம் 20 பேர்களும் சேர்ந்து அவரிடம் 1 கோடியே 53 லட்சம் வரை கொடுத்துள்ளனர். மேலும் ஆசிரியர் வியாகப்பன் அவரது தம்பி மற்றும் நண்பருடன் சேர்ந்து அரசு வேலைக்கான உத்தரவுகளை போலியாக வழங்கியுள்ளனர்.வேலை கிடைக்காமல் ஏமாந்த இவர்கள் கடந்த ஆண்டு தென்காசி குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கின் பேரில் நீதிமன்ற உத்தரவின்படி பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆசிரியர் வியாகப்பனை தேடி வந்தனர். இந்நிலையில் ஆசிரியர் வியாகப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாம்பு கடித்து பலியான பெண் குழந்தை: குடிபோதையில் விரட்டிய தந்தை கைது

Web Editor

30 நாளில் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?

Web Editor

ஓபிஎஸ் நிகழ்ச்சியில் பிரியாணிக்காக முந்தியடித்த மக்கள்

Halley Karthik