செய்திகள்

உத்தரகாண்ட் வெள்ளம்: தபோவான் சுரங்கத்தில் 35 பேரை மீட்கும் பணி தீவிரம்!

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் தபோவான் சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 35 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி நந்த தேவி மலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக ரிஷிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், 34 நபர்கள் உயிரிழந்தனர் அதில் பத்து பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் மேலும் 204 பேர் காணாமல் போய்யுள்ளனர்.

இதனால் ஆற்றின் அருகே உள்ள தபோவான் சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், அதிகாரிகள், காவலர்கள் உள்பட 35 பேர் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சுரங்கத்தில் இருந்து சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அம்மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் இந்தோ திபெத் எல்லைக் காவல்படை ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து சுரங்கத்தில் துளையிடும் பணி நேற்று இரவு 2 மணிக்கு தொடங்கியது. ரிஷிகங்கா ஆற்றில் நீரின் அளவு அதிகரித்ததால் சுரங்கத்தில் ஆறு மீட்டர் வரை துளையிட்ட பிறகு அங்கு தண்ணீர் வருவதைக் கண்ட மீட்பு குழுவினர், பணிகளை சற்று நேரம் ஒத்திவைத்த நிலையில் தற்போது மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மீட்பு படையினர் 2.5 கிலோ மீட்டர் தொலைவு வரை துளையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுரங்கத்தில் உட்புறத்திலும் சிலர் சிக்கி இருக்கலாம் என மிட்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கிறது: பொள்ளாச்சி ஜெயராமன்

Halley karthi

திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் தேவை – சரத்குமார்

Gayathri Venkatesan

விஜய் சேதுபதி நடிக்கும் முதல் இந்தி திரைப்படம்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Halley karthi

Leave a Reply