#USOpen இத்தாலியின் ஜன்னிக் சின்னெர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலியின் ஜன்னிக் சின்னெர் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள்…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலியின் ஜன்னிக் சின்னெர் சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னெர் 6-3, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.