கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைக்கான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனாவுக்கு எதிராக பயன்டுத்தப்பட்டு வருகிறது. மேலும், 12 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும் இந்த தடுப்பூசியை செலுத்த இந்தியா அனுமதி அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பும் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. சுமார் 110 நாடுகள் கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்களை தங்களது நாட்டுக்குள் வர அனுமதித்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் இந்த தடுப்பூசி இன்னும் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்த தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனையில் இருந்தபோது அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இதன் சோதனைக்கு தடை விதித்தது. இந்நிலையில், அந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்து தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
COVAXINⓇ will be evaluated as a COVID-19 vaccine candidate in the United States. #COVID19 #COVAXIN #VaccineMandate #BharatBiotech #bbv152 #COVID #clinicaltrial #Pandemic pic.twitter.com/nIWWDUKhvW
— Bharat Biotech (@BharatBiotech) February 19, 2022
பிபி152 என்ற பெயரில் தயாரித்து வரும் ஆகுஜன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சங்கர் முசுனரி, “கொரோனா தொற்றை எதிர்ப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் தேவை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்; எனவே இந்த தடுப்பூசியை உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என தெரிவித்தார்.







