முக்கியச் செய்திகள் தமிழகம்

படித்த மேதைகள் வாக்கு செலுத்த வர வேண்டும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

மெத்தப் படித்த மேதாவிகள் இனிமேலாவது வாக்கு அளிக்க வரவேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு மற்றும் குடியரசு தினத்தில் தமிழகத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்தியை அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், அலங்கார ஊர்திகளானது இன்று மெரினா கடற்கரை சாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியரசு தின விழாவின் பவள விழாவை முன்னிட்டு முதலமைச்சர் தலைமையில் கண்காட்சி ஒன்றை திறந்து வைத்தார்.

3 அலங்கார ஊர்திகளும் 2100 கிலோமீட்டர் பயணித்து சென்னை வந்துள்ளது.4 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வைத்து உள்ளோம். மெத்தப் படித்த மேதாவிகள் இனிமேலாவது வாக்கு அளிக்க வரவேண்டும். நேற்று நடந்த தேர்தலில் அதிகமாக அசம்பாவிதம் நடக்கவில்லை. அதிமுக நடத்திய தேர்தலில் ஏற்பட்ட அசம்பாவிதங்களக போல ஏதும் தற்போது நடைபெற வில்லை.

திமுக வட்ட செயலாளர் தவறு செய்திருந்தார் அவர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு, யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நடத்திய நாடகம் எல்லாம் வீணாகிவிட்டது.

இதுவரையிலும் தமிழகத்தில் நடைபெறாத அளவில் இந்த உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக சிறு தொழில் செய்தவர்கள் எல்லாம் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டார்கள்.

15 முதல் 20 சதவீதம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டார்கள் என்பதால் ஓட்டு சதவீதம் குறைவாக உள்ளது. எய்ம்ஸ் கல்லூரியில் சேர்க்க வேண்டிய 50 மாணவர்களை ராமநாதபுரம் கல்லூரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Gayathri Venkatesan

பொதுமக்கள் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்: முதல்வர் பழனிசாமி

EZHILARASAN D

தமிழ்நாடு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Arivazhagan Chinnasamy