முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் கால அவகாசம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 6 மாதம் காலநீட்டிப்பு செய்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017 ம் ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் என்று 154 பேரிடம் ஆணையம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், மருத்துவ குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று அப்போலோ நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 90 சதவீதம் ஆணையம் விசாரணை முடித்துள்ளதால் அப்பல்லோ கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அப்போலோ உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், 10 வது முறையாக கொடுக்கப்பட்ட 6 மாதம் கால அவகாசம் ஜூலை 24 ம் தேதியோடு முடிவடைகிறது. எனவே காலநீட்டிப்பு செய்ய ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியதை தொடர்ந்து 6 மாதங்கள் காலநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

’நம்ம சென்னை’ செல்ஃபி ஸ்பாட்டை முதல்வர் திறந்து வைத்தார்!

Jayapriya

கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Gayathri Venkatesan

10நாட்களுக்கு “ஆபரேஷன் பாபகுலி ஒத்திவைப்பு

Vandhana