தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் சிறப்பு சுருக்க முறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது..

இந்திய தேர்தல் ஆணைய உத்திரவின்படி சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் 01.01.2027 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல், சிறப்பு சுருக்கத் திருத்தம் (Special Summary Revision) மேற்கொள்ளப்பட்டு, இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியலின்படி சென்னை மாவட்டத்தில் மொத்தம் 29.14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் 18-19 வயது வரை உள்ள வாக்காளர்கள் 46,200 பேர் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 28,159 பேர் உள்ளனர்..

மேலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் 01.01.2027 தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 11.12.2026 வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக சென்னை தேர்தல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடகளிலும் சிறப்பு முகாம்கள் எதிர்வரும் 21.11.2026 (சனிக்கிழமை) 22.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடத்தப்பட உள்ளது.

எனவே இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுடைய வாக்காளர்கள், 01.01.2027 அன்று அல்லது அதற்கு முன்பு 18 வயது நிறைவடைவோர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்ப§கள் பரிசீலனை செய்யப்பட்டு 04.01.2027 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதில் குறைந்தபட்சமாக எண்.18. துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 120852 வாக்காளர்களும், அதிகபட்சமாக எண்.12. பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 228139 வாக்காளர்களும் உள்ளனர். மேலும் குறைந்தபட்சமாக 192 வாக்குச்சாவடிகள் எண்.18 துறைமுகம் சட்டமன்றத்தொகுதியிலும் அதிகபட்சமாக 314 வாக்குச்சாவடிகள் எண் 26. வேளச்சேரி சட்டமன்றத்தொகுதியிலும் உள்ளது.

மேலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் 01.01.2027 தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 11.12.2026 வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக சென்னை தேர்தல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடகளிலும் சிறப்பு முகாம்கள் எதிர்வரும் 21.11.2026 (சனிக்கிழமை) 22.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடத்தப்பட உள்ளது. எனவே இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுடைய வாக்காளர்கள், 01.01.2027 அன்று அல்லது அதற்கு முன்பு 18 வயது நிறைவடைவோர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு 04.01.2027 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.