அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக போலந்து நாட்டை சேர்ந்த் ஸ்வியடெக் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிப் போட்டியில் போலந்தை சேர்ந்த உலகின்
முதல்நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக், துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜெபர் உடன் மோதினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில், அபாரமாக விளையாடிய ஸ்வியாடெக் முதல் செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றினார்.
அதன்பின் இரண்டாவது செட்டை தன்வசப்படுத்தும் முயற்சியில் இறங்கியது துனிசியா
வீராங்கனை ஒன்ஸ் ஜெபர் முயற்சிகளை டை பிரேக்கர் வரை, விடாப்பிடியாக இழுத்து
சென்ற ஸ்வியாடெக், இரண்டாவது செட்டையும் 7-6 என கைப்பற்றி, முதல் முறையாக
அமெரிக்கா ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரலாற்றிலேயே, போலந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண், இறுதிப் போட்டிக்கு முன்னேறியதும், சாம்பியன் பட்டம் வெல்வதும் இதுவே முதல்முறை என்ற சாதனையை படைத்தார் இகா ஸ்வியாடெக்.
இதன்மூலம் ஸ்வியாடெக் இந்த வருடத்தின் மூன்றாவது பட்டத்தை கைப்பற்றினார். ஏற்கனவே நடப்பு ஆண்டிற்கான பிரஞ்சு ஓப்பன் மற்றும் இத்தாலி ஓபன் பட்டங்களை ஸ்வியாடெக் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.







