அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றுக்கு ரோகன் போபண்ணா ஜோடி முன்னேறியது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் லேமன்ஸ், வித்ரோ ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 7-6 (12-10), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.இதில் 6-1, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று ஜோகோவிச் அரையிறுதிக்குள் நுழைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவை 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.







