அமெரிக்காவின் மருந்துக்கடை ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
உலகில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்து வருகிறது. இங்கு கடந்த சில தினங்களாக காவல்துறையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரில் உள்ள மருந்துக் கடையில் நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்கள் 5 பேர் பலியாகினர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் குறித்தும், சம்பவத்துக்கான பின்னணி குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







